ஞாயிறு, 22 மார்ச், 2015

தனியார் பள்ளிகளுக்கான பாட புத்தகம் விலை 50 சதவீதம் உயர்வு: பள்ளிகள், பெற்றோர் அதிர்ச்சி

தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு வினியோகிக்கும் பாடப் புத்தகங்கள் விலையை 50 சதவீத்திற்கும் மேல் உயர்த்தி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிக் கழகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் ஆங்கில மீடியம் பள்ளிகளில் 15 லட்சத்திற்கும் மேல் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கான பாடப் புத்தகங்கள் தற்போது தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் வினியோகம் செய்யப்படுகிறது. இக்கல்வியாண்டில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை பாடப் புத்தகங்களில் விலையை உயர்த்தி, திருத்தி அமைக்கப்பட்ட விலைப் பட்டியலை அனைத்து மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்களுக்கும் பள்ளிக் கல்வி செயலர் சபீதா நேற்று அனுப்பி வைத்தார். அதில், மூலப் பொருட்கள், பேப்பர் விலை, அச்சடிப்பு கட்டணம், நிர்வாக செலவு, விற்பனை செலவு உயர்ந்ததால் இந்தாண்டு முதல் பாடப் புத்தகங்களில் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், 'புத்தகங்கள் விலையை அதிகபட்சம் ரூ.10 உயர்த்தி இருக்கலாம். ஆனால் பெரும்பாலான புத்தக விலை இருமடங்கு உயர்ந்தது அதிர்ச்சியாக உள்ளது. மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கும் அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை சலுகை விலை அல்லது இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வின் சில பாடப் புத்தகங்கள் விலை விவரம் பாட புத்தகம் பழைய விலை நிர்ணயிக்கப்பட்ட விலை தமிழ் 85 110 ஆங்கிலம் 85 90 கணிதம் 85 160 அறிவியல் 85 170 சமூக அறிவியல் 85 130 சிறப்பு தமிழ் 28 50 இயற்பியல் பகுதி 1 24 70 இயற்பியல் பகுதி 2 25 70 வேதியியல் பகுதி 2 35 100 விலங்கியல் 24 90 வணிகவியல் 16 50 கணக்கு பதிவியியல் 25 40
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்