புதன், 25 மார்ச், 2015

தமிழக பட்ஜெட் தாக்கல் : குக்கிராம வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.750 கோடி


சென்னை
தமிழக பட்ஜெட் தாக்கல் : குக்கிராம வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.750 கோடி

பதிவு செய்த நேரம்:2015-03-25 10:09:04

சென்னை: தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக வேளாண்துறைக்கு ரூ.6 ஆயிரத்து 613 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் பொது விநியோகத் திட்டத்தில் உணவு மானியத்திற்காக ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு அமைப்பு மூலம் ரூ.5,500 கோடி பயிர்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர் வரும் நிதியாண்டில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ரூ.21,116 கோடியை மத்திய அரசு குறைத்துவிட்டதாக புகார் கூறினார். தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க நிதி ஆணையம் தவறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு வருவாய் ஆதாரத்திற்கு விற்பனை வரியை மட்டுமே சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பட்ஜெட் துளிகள்:

* மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்த பன்னீர்செல்வம், நதிநீர் இணைப்பிற்காக பட்ஜெட்டில் ரூ.253 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார்.

* மின்சார துறைக்கு வரும் நிதிஆண்டில் 13,586 கோடி நிதி உதவி அளிக்கப்படும்

* பட்ஜெட்டில் நெடுஞ்சாலை துறைக்கு ரூ,8,228 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம சாலைகளை மேம்மபடுத்த பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் மானியம் வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க ரூ.480 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

* குக்கிராம வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.750 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் 60,000 பசுமை வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.1,260 கோடி நிதி வழங்கப்பட உள்ளது.

* தேசிய வேலைஉறுதியளிப்பு திட்டத்திற்கு ரூ.5,248 கோடி நிதி அறிவிப்பு

* சென்னை மாநகரத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.500 கோடி நிதி
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்