திங்கள், 2 மார்ச், 2015

மார்ச் 8-ல் பேரணி: ஆசிரியர் சங்கங்கள் கலந்தாய்வு

மார்ச் 8-ல் பேரணி: ஆசிரியர் சங்கங்கள் கலந்தாய்வு
மார்ச் 8ஆம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்பது குறித்து ஆசிரியர் சங்கங்களின் கலந்தாய்வுக் கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது.
தமிழக அளவில் 28 ஆசிரியர் சங்கங்களை ஒருங்கினைத்து ஜாக்டோ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு மத்திய அரசுக்கு இணையான ஊதியம், அகவிலைப்படி 50 சதவீதத்தை அடிப்படை ஊதியத்தில் சேர்க்க கோருவது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கியுள்ளது.
அதனடிப்படையில் மார்ச் 8ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்பது குறித்த சிதம்பரத்தில் ஆசிரியர் சங்கங்களின் கலந்தாய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
வட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.கலைச்செல்வன் தலைமை வகித்தார். போராட்டக்குழு பொறுப்பாளர் டி.பாண்டிதுரை வரவேற்றார். முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க பிரதிநிதி பெருமாள்ராஜ் முன்னிலை வகித்துப் பேசினார்.
ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் தங்கசாமி, வி.சண்முகம், ஆர்.இளஞ்செழியன், மக்தும், ரா.காவியச்செல்வன், எலஸ்.செல்வகணபதி ஆகியோர் தீர்மானங்களை விளக்கிப் பேசினர்.
கூட்டத்தில் மார்ச் 8ஆம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள ஆசிரியர்கள் பேரணி மற்றும் போராட்டத்துக்கு சிதம்பரம் வட்டத்திலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்