தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவசாயிக்கு தகவல் அளிக்காத தாசில்தாருக்கு ரூ.8 ஆயிரம் அபராதம்
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் மேகுந்தா கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு. விவசாயி. இவர் தனது தோட்டத்தின் அருகே உள்ள நிலம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கும்படி கொப்பா தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஸ்ரீதர் மூர்த்தியை சந்தித்து மனு கொடுத்தார். கடந்த 2013-ம் ஆண்டு அவர் மனு கொடுத்த போதிலும், இதுவரை அவருக்கு தகவல் அளிக்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து விவசாயி சந்துரு இதுகுறித்து கர்நாடக தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையத்திடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவை விசாரித்த அதிகாரிகள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கொடுக்காத தாசில்தார் ஸ்ரீதர் மூர்த்திக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

0 comments:
கருத்துரையிடுக