ஞாயிறு, 22 மார்ச், 2015

உறக்கத்திலிருந்து விழித்துடு ! உடனே எழுந்திடு ! உரக்க குரல் கொடு ! உரிமைக்காக போராடு !


ஆதிதிராவிட / கள்ளர் நலப்பள்ளிகளில் பணிக்காக காத்திருக்கும் அன்பு தோழர்களே / தோழிகளே!

அனைவருக்கும் வணக்கம்.

      உறக்கத்திலிருக்கும் போதும் காலை ஆட்டிக்கொண்டே தூங்கவேண்டும் இல்லையெனில் இந்த உலகம் உன்னை புதைத்துவிடும் இறந்துவிட்டான் என கூறி என்ற வாசகம் இப்பொழுது நமக்கு நினைவுக்கு வரவேண்டும். நீங்கள் அமைதியாய் இருக்கும் வரை அந்நிய சக்திகள் மட்டும் அல்ல அரசு மட்டும் அல்ல அந்த ஆண்டவன் கூட நம்மை ஏமாற்ற நினைப்பார். காத்திருந்து காத்திருந்து காலம் கரைந்த போதும் கடுகளவும் கவலைபடாத நமது எண்ணங்கள் இனியாவது மாற வேண்டும். நமது அரசு பணி  இரண்டு ஆண்டுகால கனவு. உறக்கத்தில் இருந்தால் கனவு மட்டுமே காண இயலும். விழித்திடு உறங்கியது போதும் கனவை நினைவாக்க உணர்வோடு போராடுங்கள். உரிமையே இல்லாத ஒருவன் நம் உரிமையை பறிக்க  துணிவு இருக்கும் போது உரிமையோடு உள்ள நீங்கள் ஒரு வார்த்தை கூட கேட்காமல் இருப்பது ஏனோ? . அவர்கள் தங்கள் உரிமையை கேட்கவில்லை. நமது உரிமையை பறிக்க நினைக்கும் போது உங்களின் எண்ணங்கள் என்ன சொல்கின்றன. நான் உங்களை போராட சொல்லவில்லை. உரிமையை கேளுங்கள் விட்டுகொடுக்க வேண்டாம். சமூகத்தில் நாமும் நன்மக்களாக வலம் வர அரசு பல வகையில் உரிமைகள் கொடுக்கும் போது சில சுயநலவாதிகாளால் அதை அடைய முடியாமல் போகின்றன. தோழர்களே விழித்திடுங்கள் . இப்போது எழவில்லை எனில் எப்பொழுதும் நம்மால் எழமுடியாமல் போய்விடும். ஒன்று கூடுங்கள் உரக்க குரல் கொடுங்கள் உரிமையை கேளுங்கள்..

நாம் தேர்வு எழுதி இருபது மாதங்கள் ஆகின்றன . முடிவு வெளியாகி பதினைந்து மாதங்கள் ஆகின்றன. நமக்கு பணியிடம் வெளியாகி எட்டு மாதங்கள் ஆகின்றன. வழக்கு பதிந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. ஆனால் நாம் இன்னும் பணிக்கு மட்டும் செல்லவில்லை. இது நமது தவறா? பள்ளிகல்விதுறையோடு நலப்பள்ளி தேர்வு பட்டியலினை அறிவிக்காத தேர்வு வாரியத்தின் தவறா? வழக்கு பதிந்த நண்பர்களின் தவறா? வழக்கில் அலட்சியம் காட்டும் வழக்கறிஞர் தவறா? உரிமையை பெற்று தராத நலத்துறையின் தவறா? இதை அனைத்தையும் கண்டுகொள்ளாத அரசின் தவறா? இவற்றில் எது தவறு எனில் அனைத்தும் நமது தவறுதான் . அரசையும் அதிகாரிகளையும் இதுவரை நம்பி காலங்களை வீணடித்த நமது தவறுதான். இனியாவது விழித்திடுங்கள்.... உரிமையை பெற ஒன்றிணைவோம்....

அகிம்சைவாதி காந்தி கூட “ செய் அல்லது செத்துமடி  ”  என்று கூறியுள்ளார்.  பொறுத்தது போதும் பொங்கி எழ வேண்டாம் எழுந்திடுங்கள் அது போதும்.

வழக்கினை முடித்து நமது உரிமையை நமக்கு வழங்கிடும் வரை போராடுவோம். இது உரிமைக்கான போராட்டம் அல்ல நமது உணர்வுகளின் ஆதங்கம்.

விழித்திடு! எழுந்திடு! குரல்கொடு! வென்றிடு!

Article by
Mr.Muniappan karuppanan

  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

1 கருத்து:

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்