புதன், 11 மார்ச், 2015

கல்வி நிறுவன மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி அமைப்பு


கல்வி நிறுவனங்களில், சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவ ஆலோசனை தேவைப்பட்டால், மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை ஆலோசகரை அணுக வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.

         பல்கலைகள், அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகள், தனியார் கல்வி நிறுவனங்களில், சூரிய மின்சக்தி உற்பத்தி அமைப்புகளை நிறுவ வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, கடந்த டிசம்பரில், யு.ஜி.சி., சார்பில், பல்கலைகளுக்கு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இக்கடித விவரம்:

கல்வி நிறுவனங்களில், சூரிய மின்சக்தி அமைப்பு களை நிறுவுவதற்கான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது. கட்டடங்களின் மேற்கூரைகள் மற்றும் காலியிடங்களில், இந்த அமைப்பை நிறுவ விரும்பும் கல்வி நிறுவனங்கள், மத்திய நவீன மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின், ஆலோசகர் என்.பி.சிங்கை, 011-2436 2288 என்ற தொலைபேசி எண் அல்லது npsinghmnes@nic.in என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். இந்த தகவலை, அனைத்து அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளுக்கும் பல்கலைகள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்