திங்கள், 16 மார்ச், 2015

அனைவருக்கும் கல்வி இயக்கம், ஜனவரி மாதம் நடத்திய மாநில அளவிலான கற்றலடைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது

ஜனவரி 19-ஆம் தேதி முதல் 23 -ஆம் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட சில பள்ளிகளில் மாநிலம் முழுவதும் கற்றலடைவுத் தேர்வு நடைபெற்றது.இந்தத் தேர்வு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் 3-ஆம் வகுப்பு, 5-ஆம் வகுப்பு,8-ஆம் வகுப்புகளுக்கு நடைபெற்றது. இதில் மாணவர்களின் வாசிப்பு திறன், எழுதும் திறன், புரிந்துகொள்ளும் திறன், கணித அடிப்படை செயல்பாடுகளை அறியும் திறன்கள் சோதிக்கப்பட்டன. அந்தத் தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் மாவட்டங்கள் பெற்ற தேர்ச்சி சதம் விவரம் வருமாறு: கரூர் 78.07, கிருஷ்ணகிரி 77.42, தஞ்சாவூர் 75.01, திருச்சி 71.68, மதுரை 71.50, கன்னியாகுமரி 70.92, திருநெல்வேலி 70.92, நாமக்கல் 70.37, பெரம்பலூர் 70.28, வேலூர் 69.34, சிவகங்கை 69.21, ராமநாதபுரம் 69.02, திண்டுக்கல் 68.88, திருவள்ளூர் 68.84, நாகப்பட்டினம் 68.64, கோயம்புத்தூர் 68.27, கடலூர் 67.66, தருமபுரி 67.44, விழுப்புரம் 67.03, விருதுநகர் 66.89, திருவாரூர் 66.33, தேனி 65.92, சேலம் 65.70, புதுக்கோட்டை65.48, ஈரோடு 64.01, காஞ்சிபுரம் 64.81,சென்னை 64.28, தூத்துக்குடி 62.52, திருவண்ணாமலை 58.27, நீலகிரி 56.08. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியது: தொடக்கக் கல்வியில் புத்தகப் பாடங்களையும், செயல் வழிக் கற்றல் அட்டைகள் மூலமும் கற்பிக்க வற்புறுத்தப்படுவதால், ஆசிரியர்களாகிய நாங்கள் தவித்து வருகிறோம். ஏதேனும் ஒருவழிக் கற்றல் முறையை அமல்படுத்தவேண்டும். உறுதியாக தரம் உயரும். தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் புத்தகங்களைக் கொண்டு மட்டுமே பாடங்கள் நடத்தப்படுகிறது என்றனர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்