சனி, 21 மார்ச், 2015

தொடர் போராட்டம் குறித்து இன்று முடிவு: தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரி யர்களின் நியாயமான கோரிக் கைகளை நிறைவேற்றுவதில் அரசு சுணக்கம் காட்டிவருவதால், அரசுக்கு எதிராக தொடர் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக மார்ச் 21-ம் தேதி முடிவு செய்யப்படும் என்றார் தமிழ் நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ரங்கராஜன். இதுதொடர்பாக திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய நடைமுறையை தொடர வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டும். தொடக்கப் பள்ளிகளை தொடர்ந்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும் அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. இதையடுத்து அரசைக் கண்டித்தும், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தொடர் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக ஜாக்டோ அமைப்பின் உயர்நிலைக்குழு மார்ச் 21-ம் தேதி சென்னையில் கூடி முடிவெடுக்கவுள்ளது என்றார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்