புதன், 11 மார்ச், 2015

அரசு உதவித்தொகை பெற ஆதார் எண் இனி கட்டாயம்


தமிழகம்
அரசு உதவித்தொகை பெற ஆதார் எண் இனி கட்டாயம்

பதிவு செய்த நேரம்:2015-03-11 00:08:39


மதுரை: முதியோர், விதவை உள்ளிட்டோர் அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் எண்ணை வரும் 20ம் தேதிக்குள் கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்ட உதவித் தொகை, கணவரால் கைவிடப்பட்டோர், முதிர் கன்னி ஆகியோருக்கு மாதம்தோறும் அரசு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவிதொகை பெறுபவர்கள் தங்கள் ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள் மற்றும் ஆதார் புகைப்படம் எடுத்து அட்டை வரப்பெறாதவர்களும் தங்களிடம் உள்ள உதவித்தொகைக்கான உத்தரவுடன் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரையோ, வருவாய் ஆய்வாளரையோ அல்லது சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரையோ நேரில் அணுகி புகைப்படம் எடுத்து ஆதார் அட்டை உடனே பெற்றுக் கொள்ளவேண்டும்.

ஆதார் அட்டை உள்ளவர்கள் அதற்கான நகல், உதவித் தொகை உத்தரவு நகல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறும் அனைத்து பயனாளிகளும் தங்கள் ஆதார் எண்ணை கண்டிப்பாக வரும் 20ம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும். பதிவு செய்த பயனாளிகளுக்கு மட்டுமே இனி வரும் காலங்களில் உதவித்தொகை வழங்கப்படும் என மதுரை கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்