உண்ணாவிரதப்போராட்டம் ஏப்ரல் இறுதியில் நடைபெறுகிறது.இதன் மூலம் எந்த ஆணியும் பிடுங்க மாட்டார்கள் என்பது அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் தெளிவாகத் தெரியும்.அடுத்து மே மாதம் கோடை விடுமுறையில் அனைத்து ஆசிரியர்களும் தங்களது சொந்த ஊரில் குடும்பத்துடன் இருக்கும்போது மீண்டும் ஒருமுறை ஆணியைப் பிடுங்க முயற்சிப்பார்கள் ,நாம் அனைவரும் சொந்த ஊரில் இருப்பதால் அதில் கலந்து கொள்ளமாட்டோம் என்பது தலைமைக்கும் தெரியும்.பெயரளவிற்கு நடத்திவிட்டு இடைநிலை ஆசிரியர்கள் பெருமளவில் கலந்து கொள்ளவில்லை எனும் பழிச்சொல்லை நம்மீது போட்டு விடுவார்கள்.அடுத்து ஜூன் மாதம் பள்ளிதிறக்கும்போது எப்படிபோராடுவது என்று அடுத்த மார்ச் வரை எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியாது.இடைநிலைஆசிரியர்கள் எதிர்பார்ப்பது உயிர்த்துடிப்புள்ள வேலைநிறுத்தப்போராட்டம்தான்.அதனை நிச்சயம் செய்யமாட்டார்கள் என்பது இடைநிலைஆசிரியர்களாகிய நம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்தநிலை நம்மைத்தவிர வேறு எந்த சீனியர் ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டிருந்தால் இது போன்ற போராட்டங்களையா நடதுவார்கள் என்பதனை அவர்கள் முடிவிற்கே விட்டு விடுவோம்.இத்தனை வருடங்களா ஆகும்.எல்லாம் சுயநலம் ஆகிவிட்டதோ என்று என்னத் தோன்றுகிறது.என்றைக்காவது நம் நிலைமை மாறாதா எனும் கனவு மட்டுமே எஞ்சி நிற்கிறது.
ஞாயிறு, 22 மார்ச், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக