திங்கள், 23 மார்ச், 2015

விபத்தில் பலியான ஆசிரியை பயிற்சி பள்ளி மாணவி உடல் உறுப்புகள் தானம்


ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையை சேர்ந்தவர் செல்வி. இவரது மகள் நவநீதா (வயது 21). இவர் அப்பகுதியில் உள்ள ஆசிரியை பயிற்சி பள்ளியில் படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாணவி நவநீதா ஆசிரியை பயிற்சி பள்ளியில் இருந்து தனது ஸ்கூட்டியில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அவருடன் அதே ஊரை சேர்ந்த தோழி கோகிலா(24)வையும் ஏற்றிக்கொண்டு வந்தார்.

அரச்சலூர் அருகே வடபழனி என்ற இடத்தில் வந்த போது எதிரே வந்த அரசு பஸ் ஸ்கூட்டி மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். நவநீதாவுக்கு தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் மாணவி நவநீதா பரிதாபமாக இறந்தார்.

தோழி கோகிலா ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து அரச்சலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விபத்தில் பலியான நவநீதா உடலின் உறுப்புகளை தானம் செய்ய தாயார் செல்வி முடிவு செய்துள்ளார்.

மாணவி விபத்தில் மூளை சாவு அடைந்திருப்பதையொட்டி மற்ற உடல் உறுப்புகள் எதுவும் சேதம் ஆகவில்லை. இதனால் அவரது கண்கள், இதயம், நுரையீரல், கிட்னி போன்ற 7 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 7 பேருக்கு வழங்கப்படுகிறது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்