பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த வாட்ஸ் அப் தகவல் ஒன்று சென்ற வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி, மொபைல் போன்களில் இயங்கும் வாட்ஸ் அப் மூலம், வாய்ஸ் கால் (Voice Call) வழியாக, மற்ற தொலைபேசிகளை அழைத்துப் பேசலாம். இதற்கெனத் தனி கட்டணம் தேவை இல்லை. இந்த வசதியைப் பயன்படுத்த, ஆண்ட்ராய்ட் இயங்கும் மொபைல் போனில், வாட்ஸ் அப் புரோகிராமின் 2.11.528 பதிப்பு, போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் லாலி பாப் பதிப்பு இயங்க வேண்டும். தொடர்ந்து வரும் காலத்தில் மற்ற சிஸ்டங்களுக்கும் இந்த வசதி விரிவு படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, வாடிக்கையாளர்கள், தங்கள் மொபைல் போன் சேவை நிறுவனங்களின் எஸ்.எம்.எஸ். டூலைப் பயன்படுத்தாமல், இலவசமாகக் கிடைக்கும் வாட்ஸ் அப் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், போன் அழைப்புகளும் இலவசமாகக் கிடைக்கப் பெற்றால், மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களின் வருமானம் இன்னும் குறையும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

0 comments:
கருத்துரையிடுக