புதன், 18 மார்ச், 2015

வரும் கல்வியாண்டுக்கு தயாராகும் கல்வித்துறை

திருப்பூர் : விரைவில் தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை துவங்க உள்ள நிலையில், அடுத்த கல்வியாண்டுக்கான பணியை, துவக்க கல்வித்துறை தயாராகி உள்ளது. பிளஸ் 2 தேர்வு நடைபெற்று வருகிறது; அடுத்து, 10ம் வகுப்பு தேர்வு துவங்க உள்ளது. தொடர்ந்து, மற்ற வகுப்புகளுக்கு தேர்வு நடைபெறும். மே மாதத்தில் கோடை விடுமுறை அளிக்கப்படும். நர்சரி, பிரைமரி பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்பில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.தனியார் பள்ளிகளுடன் போட்டி போட தயாராகி வரும் துவக்க கல்வித்துறை, அதற்கேற்ப பள்ளிகளை சீர்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. அதனால், அடுத்த கல்வியாண்டுக்கான பணியை, துவக்க கல்வித்துறை இப்போதே தயாராகி உள்ளது. ஊராட்சி ஒன்றிய மற்றும் நகராட்சி துவக்கப்பள்ளிகள் விவரம்; மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரம்; எந்த பாடத்துக்கு ஆசிரியர் தேவை உள்ளது என்பது குறித்து, கருத்துரு தயாரிக்கிறது. கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "நடப்பு மாதம் இறுதிக்குள் பட்டியல் தயாரித்து, துவக்க கல்வித்துறை இயக்ககத்திடம் வழங்க அறிவுறுத்தியுள்ளனர். ஒவ்வொரு பள்ளியில் உள்ள காலிப்பணியிடத்தை காட்டும் தலைமை ஆசிரியர்கள், அதிகமாக உள்ளவர்கள் குறித்தும் தெரிவிக்க வேண்டும் என கண்டிப்புடன் கூறப்பட்டுள்ளது,' என்றனர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்