செவ்வாய், 24 மார்ச், 2015

அகவிலைப்படி அரசுக்கு லாபம்

ஆசிரியர்களுக்கு சம்பளத்தைவிட கூடுதலாக அகவிலைப் படி கொடுக்கின்றனர். இது நல்லதல்ல. 100 சதவீதம் சம்பளம் என்றால் 107 சதவீதம் அகவிலைப்படி கொடுக்கின்றனர். மேலும் கடந்த ஜனவரி முதல் தர வேண்டிய அகவிலைப்படி பாக்கித் தொகை 6 சதவீதம் உள்ளது. அதையும் சேர்த்தால் 113 சதவீதம் அகவிலைப் படி வருகிறது. இது விலை ஏற்றத்தைக்காட்டுகிறது. அகவிலைப் படி என்பது 50 சதவீதத்துக்கு மேல் போனால் அதை சம்பளத்துடன் இணைத்து சம்பளமாக கொடுக்க வேண்டும். அதாவது 63 சதவீதத்தை இணைக்க வேண்டும் என்பது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் முடிவு. அதை இந்த அரசு செயல்படுத்தவில்லை. ஆனால் அகவிலைப் படியை உயர்த்திக் கொடுக்கின்றனர். இதனால் அரசுக்குத்தான் லாபமே தவிர, ஆசிரியர்களுக்கு எந்த வகையிலும் லாபம் இல்லை. அதனால் சர்வதேச விதிகளை அரசு பின்பற்ற வேண்டும் என்று ஆசிரியர்கள் பல முறை கேட்டும் அரசு மவுனமாக உள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்