செவ்வாய், 24 மார்ச், 2015

ஏ.டி.எம்.,மிற்கு ஒரு நடை போய் வருவது நல்லதோ?


               அடுத்தடுத்து, அரசு விடுமுறை நாட்கள் வரவுள்ளதால், நாட்டின் பல மாநிலங்களிலும், அடுத்த வாரத்தில், ஆறு நாட்களுக்கு, தொடர்ச்சியாக, வங்கிச் சேவைகள் இருக்காது என, தெரிகிறது.

                 இதனால், வங்கிப் பணிகள் பாதிக்கப்படும் என்பதோடு மட்டுமல்லாது, ஏ.டி.எம்.,மில் இருந்து பணம் எடுப்பதும்கூட, சிரமம் ஆகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பணம் எடுப்பது மற்றும் அனுப்புவது போன்ற விஷயங்களை, வரும் 27ம் தேதிக்கு முன் முடித்துக் கொள்வது நல்லது. காரணம், மார்ச் 28ம் தேதி முதல், அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் விடப்படவுள்ளதால், வங்கிகளில், முற்றிலுமாக பணிகள் இருக்கப்போவதில்லை.
                      இந்நிலை, ஏப்ரல் 5ம் தேதி வரை நீடிக்கும் என தெரியவந்துள்ளது. வங்கிகளுக்கு விடுமுறை என்றாலும், ஏ.டி.எம்.,மில் இருந்து பணம் எடுப்பதிலும்கூட, சிரமம் ஏற்படலாம். காரணம், பெரும்பாலான ஏ.டி.எம்.,களில், ஓரிரு நாட்களுக்கு தேவையான பணத்தை மட்டுமே, வங்கிகள் நிரப்பி வைப்பதுண்டு. அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் என்பதால், ஏ.டி.எம்., சேவைகளும், நிச்சயம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்