சென்னையில் உண்ணாவிரதம் இருந்துவந்த 7 பார்வையற்ற பட்டதாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணியிடம் வழங்குதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற பட்டதாரிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை சேப்பாக்கத்தில் இன்று அரசு விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 9வது நாளாக உண்ணாவிரதம் இருந்தவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட 7 பார்வையற்ற பட்டதாரிகளின் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது.
டிபிஐ வளாகத்தில் பார்வையற்ற பெண் பட்டதாரிகளின் உண்ணாவிரதம் தொடர்கிறது.

0 comments:
கருத்துரையிடுக