FLASH NEWS-ஜாக்டோ உயர்மட்டக்குழுக்கூட்டம் சென்னையில் தொடங்கியது
ஜாக்டோ உயர்மட்டக்குழுக்கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் தொடங்கியது.கூட்டத்திற்கு கூட்டுத்தலைமையாக சுழற்சி முறைஅடிப்படையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகமும் ,தமிழநாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாள்ர்களும்தலைமையேற்றுள்ளனர்,
கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பாக தலைவர் திரு.கு.சி மணி அவர்களும் ,தலைமை நிலையசெயலர் திரு.சாந்தகுமார் அவர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஜாக்டோ இயக்கத்தில் சேர புதியதாக 5 சங்கங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன அவற்றை இணைப்பது பற்றி கூட்டத்தில் கலந்து பேசி முடிவாற்ற உள்ளனர்.மேலும் மாவட்டப்பேரணி குறித்த ஆய்வும்,தொடர் நடவடிக்கை குறித்தமுக்கிய முடிவுகள் விவாதித்து எடுக்க வும் வாய்ப்புள்ளதாக செய்திகள் கூறுகின்றன

0 comments:
கருத்துரையிடுக