திங்கள், 23 மார்ச், 2015

PGTRB : சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவருக்கு பணி டிஆர்பிக்கு ஐகோர்ட் உத்தரவு

சான்றி தழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவருக்கு ஆசிரி யர் பணி வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென டிஆர்பிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சியை சேர்ந்த சங்கர் கரிகாலன், ஐகோர்ட் மதுரை கிளை யில் தாக்கல் செய்த மனு; தமிழ்நாடு ஆசி ரியர் தேர்வு வாரியம் நடத் திய முதுகலை வணிகவியல் ஆசிரியர் பணிக்கான தேர் வில் 2012ம் ஆண்டு நான் வெற்றி பெற்றேன். உடல் நிலை சரியில்லாத தால் சான்றிதழ் சரிபார்ப் பில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள மற்றொரு வாய் ப்பு அளிப்பதாக கூறிய டிஆர்பி எந்த தேதியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக் கும் என்பதை தெரிவிக்க வில்லை. இது தொடர்பான வழக்கில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு என்னை அழை க்க ஐகோர்ட் உத்தரவிட் டது. இதன்படி கடந்த 26.4. 2013ல் நடந்த சான் றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். நான் தேர்வு செய்யப்பட்டது குறித்து அதிகாரிகள் எது வும் தெரிவிக்கவில்லை. சான்றிதழை சரிபார்க்க ஐகோர்ட் இடைக்கால உத்தரவிட்டுள்ளதாகவும், வழக்கில் இறுதி தீர்ப்பு வந்த பிறகே எனக்கு ஆசிரி யர் பணி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஐகோர்ட் உத்த ரவை தவ றாக புரிந்து கொண்டு எனக்கு ஆசிரியர் பணி வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர். எனவே, எனக்கு ஆசி ரியர் பணி வழங்க உத்தர விட வேண்டும்.இவ் வாறு மனுவில் கூறப்பட்டிருந் தது. மனுதாரர் சார்பில் வக் கீல் டி.லெனின்குமார் ஆஜ ரானார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, �ஏற்கனவே ஐகோர்ட் பிறப்பித்தது இறுதி உத்தரவு தான். ஆனால், டிஆர்பி இடைக் கால உத்தரவு எனக் கூறி மனுதாரருக்கு வேலை வழங்க மறுப்பது சரியல்ல. எனவே, மனுதாரருக்கு ஆசிரியர் பணி வழங்குவது குறித்து 8 வாரத்துக்குள் டிஆர்பி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.� என உத்தரவிட்டுள்ளார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்