ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

100% வரி வசூல் இலக்கை அடைய சம்பளம் பிடித்தம்: தற்கொலை செய்வதாக ஆர்.ஐ கடிதம்


நாகை:  நாகை மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க செயலாளர் அன்பழகன், சென்னை நகராட்சி நிர்வாக அரசு முதன்மை செயலாளர், சென்னை  நகராட்சி நிர்வாக இயக்குனர், தஞ்சை மண்டல இயக்குனர்,  கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தாமோதரன். 2014-15ம் ஆண்டிற்கான வீட்டு வரி வசூல்  இலக்கீட்டை வேதாரண்யம் நகராட்சி 98 சதவீதம் எட்டி உள்ளது. 100 சதவீத இலக்கை அடைந்ததாக காட்டி கொள்வதற்காக ஆர்ஐ தாமோதரனை  நிர்பந்தப்படுத்தி, அவரது ஒரு மாத ஊதிய தொகை முழுவதையும், கடந்த 6ம்தேதி வேறு ஒரு நபரின் வங்கி கணக்கு வழியே வங்கியிலிருந்து எடுத்து  வரிவசூல் இலக்கை 100 சதவீதம் எட்டி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஒரு வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் வைத்திருக்க வேண்டிய தொகையை கூட விடாமல் எடுத்துள்ளனர். தற்போது தாமோதரனின்  வங்கிக்கணக்கில் ரூ.74தான் பாக்கி உள்ளது. இதனால் வயதான தாயாருக்கு மருத்துவ செலவு, குடும்ப செலவு எதையும் செய்ய முடியாமல் மிகுந்த  மனஉளைச்சலுடன் இருப்பதாகவும், உயரதிகாரிகளின் மனரீதியான துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலையில் இருப்பதாகவும்  தாமோதரன் மாவட்ட அரசு ஊழியர் சங்கத்திற்கு எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளார். அரசு ஊழியரின் சம்பளத்தை மிரட்டி பறித்த அதிகாரிகள் மீது  துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அன்பழகன்  மனுவில் தெரிவித்துள்ளார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்