ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

பி.எப்., பணம் எடுத்தால் 10 சதவீத வரி கழிக்க திட்டம்


புதுடில்லி: வருங்கால வைப்பு நிதியில் சேர்த்து வரும் தொகையை, ஐந்து ஆண்டுகளுக்குள், தொழிலாளர்கள் திரும்பப் பெற்றால், 10.3 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்ய, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான (ஈ.பி.எப்.ஓ.,) முடிவு செய்துள்ளது.இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனத்தில்,
மாத சம்பளம் 6,500 முதல், 15 ஆயிரம் ரூபாய் வரை பெறும் ஊழியர்களின் சம்பளத்தில், 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, பி.எப்., கணக்கில் செலுத்தப்படும். அதற்கு இணையான தொகையை, நிறுவனம் செலுத்தும். ஊழியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள் ஓய்வு பெற்றாலோ அல்லது அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி, வேறு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தாலோ, பி.எப்., கணக்கில் உள்ள பணத்தை திரும்பப் பெறுவதற்கு, 10.3 சதவீத வருமான வரி செலுத்த வேண்டும். ஒரு ஊழியரின் சம்பளத்தில் இருந்து, பி.எப்., கணக்கில் செலுத்தப்படும் தொகை, ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாயை தாண்டினால், அந்த ஊழியர் தன் பான் கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும். ஊழியர்களிடம் பான் கார்டு இல்லை என்றாலோ அல்லது பான் எண்ணை குறிப்பிடவில்லை என்றாலோ, பி.எப்., கணக்கில் உள்ள பணத்தை திரும்பப் பெற முடியாது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில், உறுப்பினர்களாக உள்ளவர்களில், ஏறக்குறைய, 8.5 கோடி உறுப்பினர்களிடம் (90 சதவீதத்தினர்) பான் கார்டு இல்லை. பான் கார்டு இல்லாதவர்கள், தங்களுடைய பி.எப்., பணத்தை திரும்பப் பெறும் போது, அதிகபட்ச வருமான வரம்புக்கான, 35 சதவீத வரி செலுத்த வேண்டி இருக்கும். ஐந்து ஆண்டுகளுக்குப் பின், பி.எப்., பணம் பெறுபவர்களிடம் இருந்து, வருமான வரி பிடித்தம் செய்யப்படாது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்