சனி, 18 ஏப்ரல், 2015

மாவட்ட வாரியாக நடக்கிறது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் நாளை உண்ணாவிரதம்

மாவட்ட வாரியாக நடக்கிறது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் நாளை உண்ணாவிரதம்
ஊதிய உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளைதமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதில், 27 ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்கின்றன.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக, கடந்த மாதம் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைத்தார். ஆனால், தலைமைச் செயலகம் வந்த ஆசிரியர்் சங்க பிரதிநிதிகளை நீண்ட நேரம் காக்க வைத்த முதல்வர் அவர்களிடம் பேச்சுவார்த்தைநடத்தாமல் திருப்பி அனுப்பிவிட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள்ஜேக்டோ அமைப்பை மீண்டும் உருவாக்கி தொடர் போராட்டங்கள் நடத்த அறிவிப்பு விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து, மாவட்டங்களில் பேரணிகளை ஆசிரியர்கள் நடத்தினர். அதற்கு பிறகும் அரசு ஆசிரியர்கள் பிரச்னை மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, இப்போது மீண்டும் 27 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து அனைத்து மாவட்ட தலைநரங்களிலும் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். திட்டமிட்டபடி, நாளை இந்த உண்ணாவிரதம் நடக்கிறது. இதில், 27 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.அனைத்து ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைமை தாங்க உள்ளனர்.
இதற்கு பிறகும் ஆசிரியர்கள் கோரிக்கை மீது நடவடிக்கைஎடுக்காவிட்டால், தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை பட்டதாரிஆசிரியர்கள் என அனைத்து தரப்பு ஆசிரியர்களும் நாளை உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதையடுத்து, மாவட்டங்களில் பதற்றம் ஏற்படுவதை தடுக்கவும், தேைவப்பட்டால் ஆசிரியர்களை கைது செய்யவும் போலீசார் தயார் நிலையில் இருக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்