பேரணியில்
நம் குரல் கேட்டு
செவி சாய்க்காத
அரசுக்கு
அடுத்து இடிச்சத்தத்தை
பரிசளிப்போம்.
நம்
விடைகளுக்கு
பதில் தராத
வித்தியாச அரசிற்கு
விரைவில் நாம்
விடையளிப்போம்
விடாமல்
பதில் அளிப்போம் .
புதிய ஓய்வூதியத்தை
புதைத்திட வா.
மைய அரசிற்கு
இணையான ஊதியத்தை இழுத்துப்பிடிக்க வா.
சதம் தாண்டிய
அகவிலைப்படியை
அடிப்படை ஊதியத்தோடு
இணைத்திட வா.
தாய்த்தமிழ்
முன்னுக்கு வர
முன்னே வா.
தொகுப்பூதிய காலத்தை
காலனிடம்
காட்டிக்கொடுக்க
காளையென சீறி வா.
தலைமையாசிரியர்
திண்டாடும்
திட்டங்களை கவனிக்க
தனியாள் வேண்டி
திரளாய் வா.
நம்மைத் தாக்கும்
வன்முறை
கூட்டத்தை
ஆட்டமிழக்கச்செய்ய
ஆற்றலோடு வா.
பதவி உயர்வே
எட்டாதவற்கு
பணமாவது கிட்டுவதற்கு
பாயந்தோடி வா.
உணவிருந்தாலும்
உணர்விருந்தால்
உண்ணாநிலைப்
போருக்கு
உடனே கிளம்பு
ஏப்ரல் பத்தொன்பது
ஜாக்டோ உண்ணாவிரதப்போர் .

0 comments:
கருத்துரையிடுக