திங்கள், 20 ஏப்ரல், 2015

ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் நேரடி நியமனத்தை எதிர்த்து வழக்கு

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கான முதுநிலை விரிவுரையாளர் நேரடி நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்குமாறு, பள்ளிக் கல்விச் செயலர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை
உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர்களாகப் பணியாற்றும் 30 பேர் தாக்கல் செய்த மனு விவரம்:மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், விரிவுரையாளராக பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறோம். ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் காலியாக இருக்கும் முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்களில், மூன்றில் ஒரு பங்கு இடத்தை நேரடியாகவும், எஞ்சிய இடங்களை பதவிஉயர்வு மூலமாகவும் நிரப்பவேண்டும். இதன்படி, 51 பணியிடங்கள் மட்டுமே நேரடியாக நியமிக்கப்பட வேண்டும்.இதில், 31 பணியிடங்கள் ஏற்கெனவே நேரடி நியமனத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இன்னும் 20 இடங்கள் மட்டுமே பூர்த்தி செய்யவேண்டிய நிலையில், 34 பணியிடங்களை நேரடியாக நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் சான்றிதழ் சரிபார்க்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

இதனால், பதவி உயர்வுக்கு காத்திருப்பவர்களின் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 34 பணியிடங்களை நேரடியாக நியமிக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.இந்த மனு, நீதிபதி எஸ். வைத்தியநாதன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக நியமிக்கப்படும் 34 முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை பொருத்தே இருக்கும் என்று உத்தரவிட்டார்.மேலும், இந்த மனு தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலர், ஆசிரியர் தேர்வுவாரியத் தலைவர் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்