கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றிய உதவித்தொடக்கக்கல்வி அலுவலகத்தின் மந்தமானபோக்கினை கண்டித்து விரைவில் போராட்டம்-
மங்களூர் ஒன்றியத்தில் பிஎட் முடித்த இடைநிலை ஆசிரியர்கள் ஊக்க ஊதிய உயர்வுக்கோரி கடந்த டிசம்பர் மாதம் விண்ணப்பித்துள்ளனர்.அந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய அனுமதிக்கப்பட்டு பிப்ரவரி மாதம் முதல் ஊக்க ஊதிய உயர்வை ஊதியத்துடன் பெற்று வருகின்றனர்.ஆனால் ஊக்க ஊதிய உயர்வு நிலுவைத்தொகை சுமார் ஐந்து மாதங்களாக வழங்கப்படவில்லை.இதுகுறித்து அலுவலக ஊழியர்களிடம் கேட்டால் முறையற்ற காரணங்களைக் கூறி தாமதப்படுத்துகின்றனர்.இந்நிலை தொடரும் பட்சத்தில் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகத்தின் மந்தமான போக்கினை கண்டித்து தொடர்போராட்டங்கள் நடத்த ஆசிரியர்கள் முடிவெடுத்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக