செவ்வாய், 21 ஏப்ரல், 2015

வெளிநாட்டு கல்விக் கனவு நனவாகுமா! பாழாகுது அரசு திட்டம்

ஏழை மாணவர்களை வெளிநாட்டில் படிக்க வைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு, அரசுக் கல்லுாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது; இதனால், ஏழை மாணவர்களின் வெளிநாட்டு கல்விக் கனவு பாழாகிவருவதாக பேராசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஏழை மாணவர்கள் வெளிநாடு சென்று படித்து வரும் வகையில் சிறந்த திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிமுகம் செய்தது. அதன்படி, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு, ஒரு பருவம் பிரிட்டனில் உள்ள பல்கலைக் கழகங்களில், முழுவதும் அரசு செலவில் படிக்க வைக்கப்படுகின்றனர். ஆண்டுக்கு, 25 மாணவர்களும், ஆராய்ச்சி மேற்கொள்வதற்கென, ஐந்து பேராசிரியர்களும் அனுப்பிவைக்கப்படுவர்.தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், மார்ச் மாதத்தில் அனைத்து அரசு கல்லுாரி முதல்வர்களுக்கும் இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்படும்.
படிப்பில் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து, விண்ணப்பங்களை தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தில் கல்லுாரிகள் சமர்ப்பிக்க வேண்டும்.இதற்கு, முதுகலை முதலாமாண்டு மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாணவர்கள், இளங்கலையில், 70 சதவீத மதிப்பெண் தேர்ச்சி, ஆங்கிலம் பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும். முதல் கட்டமாக கல்லுாரி அளவில் நடத்தப்படும் தேர்வில் தகுதி பெற வேண்டும்.பின், பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் சர்வதேச ஆங்கில மொழித் திறன் தேர்வு (ஐ.இ.எல்.டி.எஸ்.,), பேச்சுத் திறன் தேர்வு, நேர்முகத்தேர்வுகளில் தகுதி பெற வேண்டும்.இத்திட்டத்தில் மாணவர்கள் பிரிட்டனின் கலை, கலாசாரம், கல்வித் திட்டங்களை அறிந்து கொள்வதோடு, சர்வதேச அறிவையும் பெற முடிகிறது. ஆனால், இத்திட்டத்தின் மீது பல அரசு கல்லுாரிகள் போதிய ஆர்வம் காட்டுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாடு உயர் கல்விமன்ற அதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்திட்டத்தில், 2015 - 16 கல்வியாண்டுக்கு கடந்த மார்ச் மாதம் அரசு கலை கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. கல்லுாரிகள் மாணவர்களைத் தேர்வு செய்து விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஏப்., 11ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், 25க்கும் குறைவான கல்லுாரிகள் மட்டுமே விண்ணப்பங்கள் அனுப்பின; மீதமுள்ள, 4௦க்கும் மேற்பட்ட கல்லுாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவில்லை. தவிர, இத்திட்டம் குறித்து மாணவரிடம் போதிய விளம்பரமோ, அறிவிப்போ கல்லுாரிகள் செய்யவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில்,''கடந்த மாத இறுதியில்தான் உயர் கல்வி மன்றத்திலிருந்து சுற்றறிக்கை வந்தது. இம்மாதம், 11ம் தேதி விண்ணப்பிக்க கடைசியாக அறிவிக்கப்பட்டது. பருவத்தேர்வும் நடந்துவருவதால், குறுகிய காலத்தில் மாணவர்களை கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, குறைந்தது, 3௦ நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும்,'' என்றார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்