இறுதியாக கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியத்தில் ஆசிரியர் கூட்டுறவு நாணய சங்கத்தில் கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களில் "ஆசிரியர் வாய்ஸ்"சிவக்குமார் தவிர மற்ற அனைவருக்கும் கடன்தொகை அவரவர் வங்கிகணக்கில் வரவுவைக்கப்பட்டுவிட்டது.உரிமைக்காக போராடுபவன் இதுபோல் எத்தனையோ இழப்புக்களை சந்திக்க தயாராக இருக்கவேண்டும்.ஆசிரியர் வாய்ஸ் சிவக்குமார் கடன் பெறுவதைத்தடுக்க ரூம் போட்டு யோசனை செய்து உள்ளார்கள் என்றுமட்டும் தெரிகிறது.எத்தனை உள்ளடி வேலைகள்,எத்தனை மறைமுக பேச்சுவார்த்தைகள் .ஆசிரியர் வாய்ஸ் சிவக்குமார் கடன் பெறுவதை தடுக்க ஒரு குழுவே கடுமையாக உழைத்திருப்பதை பார்க்கும்பொழுது பெருமையாக இருக்கின்றது.இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் யார் உரிமைக்காக போராடுகிறமோ அவர்களே எதிரிபோல் பார்ப்பதுதான்.என்ன செய்வது சுயமரியாதை இழந்து கடன்பெற மனம் ஒப்பவில்லையே?ஆனால் ஒன்று ஆசிரியர் வாய்ஸ் சிவக்குமார் பெயர் மங்களூர் ஒன்றியம் முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டது.அதற்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.
வெள்ளி, 24 ஏப்ரல், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.
0 comments:
கருத்துரையிடுக