சென்னைப் பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் முதுகலை மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பரில் முதுகலை படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு
முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளில் சந்தேகம் கோரி எம்.பி.ஏ.,
எம்.சி.ஏ., எம்.எஸ்சி. (தகவல் தொழில்நுட்பம்) உள்ளிட்ட படிப்புகளுக்கு
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதற்கான தேர்வு முடிவுகள்
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகத்தின் www.ideunom.ac.in, www.unom.ac.in ஆகிய இணையதளங்கள் மூலம் முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

0 comments:
கருத்துரையிடுக