சனி, 25 ஏப்ரல், 2015

மாணவர்கள் கடத்தலை தடுக்க பள்ளியின் வாசலில் அறிவிப்பு பலகை

ஆழ்வார்திருநகர்: போலீசாரை தொடர்பு கொள்ளும் வகையில், அரசு பள்ளி அருகே, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. வளசரவாக்கம் பகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளின் நுழைவாயில்களில்,
காவல் துறை சார்பில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் கூறியதாவது:
சென்னையில், மாணவர்கள் கடத்தலை தடுக்கும் விதமாக, அனைத்து பள்ளிகளின் நுழைவாயில்களிலும், அறிவிப்பு பலகை வைத்துள்ளோம். பள்ளியின் முன்பு, யாரேனும் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்தால் உடனே தொடர்பு கொள்ள, தொடர்பு எண்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன், ஆற்காடு சாலையில் உள்ள அரசு பள்ளியின் நுழைவாயிலில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை உபயோகமாக உள்ளதாக, பல பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்