லாகூர்: சிங்கத்தைக் கூண்டில் பார்த்தாலே பலருக்குப் பயந்து வரும்.
ஆனால் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் சிங்கத்தின் பிடரிக்குப் பக்கத்தில்
போய் படு துணிச்சலாக போட்டோ எடுத்து வந்து உலகையே அதிர வைத்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்தது என்னவோ 2012ம் ஆண்டுதான் என்றாலும் இப்போதுதான் இந்த
விவகாரம் ஹிட்டாகியுள்ளது.
சிலருக்கு திரில் பிடிக்கும்.. சிலரோ திரில்லான வாழ்க்கையிலேயே எப்போதும்
வாழ்ந்து வருவார்கள். அப்படிப்பட்ட ரகத்தைச் சேர்ந்தவர்தான் லாகூரைச்
சேர்ந்த ஆதீப் சயீத். 38 வயதாகும் இவர் ஒரு புகைப்படக்காரர்.
அடிக்கடி காட்டுக்குள் சென்று வன விலங்குகளையும், இயற்கைச் சூழலையும் படம்
பிடிப்பவர் இவர். இப்படித்தான் 2012ம் ஆண்டு ஒரு நாள் லாகூர் சபாரி
பூங்காவுக்குச் சென்றிருந்தார். காட்டுக்குள் சென்ற அவர் அங்கு ஒரு ஆண்
சிங்கம் நடந்து வந்ததைப் பார்த்தார். அதை வெகு அருகே போய் படம் பிடிக்க
முடிவு செய்த அவர் மெதுவாக காரை விட்டு இறங்கி சிங்கத்தை நெருங்கி அதன்
முன்பு போய் நின்றார்.
திடீரென ஒரு "இரை" தன் முன்பு வந்து நின்றதைப் பார்த்த அந்த சிங்கம்
கோபத்துடன் பிடரி சிலிர்க்க கர்ஜித்தது. அதை அப்படியே கேமராவுக்குள்
அடக்கினார் ஆதீ்ப். அதன் பிறகு சிங்கம் கோபத்துடன் அவரை நோக்கிப் பாய
எத்தனித்தத. அதற்குப் பிறகும் நின்றால் காலி என்பதை உணர்ந்த ஆதீப்
அங்கிருந்து வேகமாக ஓடி வந்து காரில் ஏறித் தப்பினார்.
இந்தப் படத்தை தனது கம்ப்யூட்டரில் ஸ்கிரீன் சேவராக போட்டு வைத்திருந்தார்
ஆதீப். தற்போது இது இன்டர்நெட்டில் வைரல் ஆகியுள்ளது.
மறுபடியும் இதேமாதிரி செய்வீர்களா என்று கேட்டால், அப்போது அதை ஜாலியாக
செய்து விட்டேன். ஆனால் நிச்சயமாக என்னால் மறுபடியும் இதேபோல செய்ய
முடியாது என்றார் சிலிர்ப்புடன்.
வியாழன், 16 ஏப்ரல், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.


0 comments:
கருத்துரையிடுக