செவ்வாய், 21 ஏப்ரல், 2015

விடைத்தாள் திருத்தும் பணி; கல்வித்துறை புதிய உத்தரவு

திருப்பூர் : விடைத்தாள் திருத்தும் பணியில் சிக்கல் ஏற்படுவதை தடுக்க, கல்வித்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, நேற்று துவங்கியது. மே இறுதி வாரத்தில், தேர்வு முடிவை அறிவிக்க, அரசு தேர்வுகள் துறை திட்டமிட்டுள்ளதால், விடைத்தாள் திருத்தும் பணியை விரைவாக முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. தேவைக்கேற்ப ஆசிரியர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பற்றாக்குறையால், விடைத் தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டதாக, கடந்த முறை சில மாவட்டங்களில் இருந்து கல்வித்துறைக்கு புகார் சென்றது. அதே போன்ற நிலை ஏற்படாமல் இருக்க, இம்முறை பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவு வெளியிட்டுள்ளது.

அதன்படி, விடைத்தாள் திருத்தும் பணிக்குச் செல்லும் ஆசிரியர்கள், முகாம் அலுவலரான, மாவட்ட கல்வி அலுவலர் அல்லது முதன்மை கல்வி அலுவலரிடம் இருந்து, 'விடுவிப்பு சான்றிதழ்' பெற்று வந்தால் மட்டுமே, பள்ளியில் வழக்கமான ஆசிரியர் பணியில் அவரை அனுமதிக்க வேண்டும். இதை கண்டிப்பாக தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும் என, அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்