சனி, 18 ஏப்ரல், 2015

அன்பிற்கினிய ஆசிரிய சகோதர,சகோதரிகளே!-நன்றி ஜெய பிரபு

மாவட்டத் தலைநகரங்களில் நாளை காலை 10 மணிக்குத் தொடங்க இருக்கும் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஜாக்டோ' நடத்தும் மாபெரும் உண்ணாவிரத அறப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டிய முழு பொறுப்பும் நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது.
இப்போது நாம் பெற்றுக் கொண்டிருக்கக் கூடிய உரிமைகள் அனைத்தும் நம் முன்னோடி சங்கவாதிகள் பல கட்ட பேச்சுவார்த்தைகள், போராட்டங்கள்,ஆர்ப்பாட்டங்கள்,தியாகங்கள் வாயிலாக நமக்குப் பெற்றுத் தந்தது.
கல்வி அறிவு பெற்ற நல்ல சமுதாயத்தை உருவாக்கும் சிற்பிகளான ஆசிரிய சமுதாயம்,
தமது நியாயமான கோரிக்கையான பணிப்பாதுகாப்பினை வேண்டி போராட வேண்டிய துர்பாக்கியமான நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளது.
உலகின் கடைக் கோடி குழந்தைக்கும் தரமான கல்வியறிவு கிடைக்க வேண்டுமென போராடும் அதே வேளையில், அப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற எண்ணத்தில் மாற்றுக் கருத்து ஏதுமிருக்க முடியாது.
ஆகவே அனைவரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்வோம்.வெற்றி பெறுவோம்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்