2014-ஆம் ஆண்டுக்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது..... இது குறித்து சி.என்.ஆர்.ராவ் கல்வி அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாட்டில் உள்ள மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டுவிடுவதில் அக்கறையோடு செயல்பட்டுவரும் அறிவியல் ஆசிரியர்களை ஊக்குவிப்பதற்காக அறிவியல் அறிஞர் சி.என்.ஆர்.ராவ் கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுகளை, 2005-ஆம் ஆண்டு முதல் வழங்கிவருகிறது.
விருதுக்குரிய அறிவியல் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ஜவகர்லால்நேரு அதிநவீன அறிவியல் ஆராய்ச்சி மையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 2014-ஆம் ஆண்டுக்கான அறிவியல் ஆசிரியர் விருதுகள் கர்நாடகமாநிலம், பெலகாவி மாவட்டம், கோகக் வட்டத்தில் உள்ள பண்டித் ஜவகர்லால்நேரு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பிரகாஷ் ராமசந்திரகரகட்டி, தில்லியை சேர்ந்த கேந்த்ரிய வித்தியாலயா பள்ளியின் ஆசிரியர் மீனுவத்வா ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
இந்தவிருதுகள் மையத்தின் வளாகத்தில் உள்ள சி.என்.ஆர்.ராவ் அறிவியல் அரங்கத்தில் ஜூன் 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக