சனி, 16 மே, 2015

ஜூன் 22 முதல் ஜூலை 3 வரை பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: மே 20 வரை விண்ணப்பிக்கலாம்


பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு மே 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய இந்தத் தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 22-ஆம் தேதி முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி:

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி அடையாத, வருகை புரியாத மாணவர்களுக்காக, ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத் தேர்வுகள் அரசுத் தேர்வு துறையால் நடத்தப்பட உள்ளன.

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு, பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் வரும் மே 20-ஆம் தேதி வரை தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கான தேதிகள், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்போது அறிவிக்கப்படும். தற்போது பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுகள் நடைபெறும் தேதி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்