வெள்ளி, 15 மே, 2015

பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்:


முதல் நாளில் 80 சதவீதம் பேருக்கு விநியோகம்
பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளிலேயே 80 சதவீத மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர். 8.8 லட்சம் மாணவர்கள்: தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதினர். மே 7-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
அப்போது மதிப்பெண் விவரங்களை மாணவர்கள் இணையதளம் மூலம் தெரிந்து கொண்டனர். இந்த நிலையில், மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களுடன் மதிப்பெண் சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் இந்த ஆண்டு, முதல் முறையாக தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதன்படி, அந்தந்த பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, மே 14-ஆம் தேதி பள்ளி தலைமை ஆசிரியர்களால் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு, தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து வரும் நாள்களிலும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்குச் சென்று தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். இந்த மதிப்பெண் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும்.

இது தவிர தனித் தேர்வர்களும் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியர்களிடமிருந்து தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். அசல் சான்றிதழ் எப்போது? நடப்பாண்டு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளன.

எனினும், பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு திருத்தப்பட்ட மதிப்பெண்கள் கிடைத்த பிறகு, அனைத்து மாணவர்களுக்கும் ஒட்டுமொத்தமாக அசல் சான்றிதழ்கள் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்