வியாழன், 21 மே, 2015

7 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லை: ஆர்.எம்.எஸ்.ஏ., பணியாளர்கள் விரக்தி


அனைவருக்கும் இடைநிலைக்கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு, ஏழு ஆண்டுகளாக எவ்வித ஊதிய உயர்வும் வழங்காததால், கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம், கடந்த, 2007ம் ஆண்டு, துவங்கப்பட்டது. ஒன்பது மற்றும், பத்தாம் வகுப்பு கல்வியினை மேம்படுத்துதல், மாணவர் எண்ணிக்கையை அதிகரித்தல், உள் கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல், ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதில் நிர்வாக வசதிக்காக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்துக்கும், கணக்கு தொகுப்பாளர், டேட்டா என்ட்ரி
ஆப்ரேட்டர், கட்டட பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட்டது. இதே போல், இத்திட்டத்தில் துவக்கப்பட்ட, 44 மாதிரி பள்ளிகளிலும், இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், நூலகர், துப்புரவு பணியாளர், இரவு காவலர், தோட்டக்காரர் உள்ளிட்ட பணியிடங்களும் தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட்டுள்ளது. இவர்களுக்கு, 4,500 ரூபாய் முதல், 6,000 ரூபாய் வரை, தொகுப்பூதிய சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் கடந்த, ஏழு ஆண்டுகளாக பணிபுரிபவர்களுக்கும், கூட பணியில் சேர்ந்தது முதல், இதுவரை எவ்வித ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை. அதிகரித்து வரும் விலைவாசியில், ஊதிய உயர்வு இல்லாததால், கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்