சனி, 23 மே, 2015

நலத்துறை பள்ளிகளில் 87 சதவீதம் தேர்ச்சி


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு தேர்வில், 87 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 47 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில், 6,663 மாணவியர் உட்பட, 13,443 பேர், 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். இவர்களில், 11,663 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம், 87 சதவீதம். மேலும், 47 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. நலத்துறை பள்ளிகளில், கரூர் மாவட்டம், புன்னம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மாணவர் கார்த்திக், 491 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்