மணலி புதுநகர் அரசு பள்ளியில் படித்து 1102 மார்க் எடுத்து சாதனை படைத்திருக்கும் காவியா பெரிய ஈச்சங்குழி என்ற கிராமத்தில் வசிக்கும் சாதாரண ஏழை குடும்பத்தை சார்ந்த மாணவி, அப்பா சேகர் தினமும் கூலி வேலைக்கு சென்று மகள் காவியாவை படிக்க வைத்தார்.
தன் குடும்ப வறுமையை உணர்ந்து படித்த காவியா மணலி புதுநகரில் மக்களை கொள்ளையடித்து கொண்டிருக்கும் தனியார் பள்ளிகளுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக மணலி புதுநகரில் உள்ள அரசு பள்ளியில் படித்து பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார் தகவல் அறிந்ததும் மாணவிக்கு வாழ்த்துக்கள் கூற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பெரிய ஈச்சங்குழி கிளை சார்பாக மாணவி வீட்டுக்கு சென்றிருந்தோம் அப்பொழுது அந்த மாணவிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து மேற்கொண்டு என்ன படிக்க போகிறாய் என்று கேட்டதற்கு மேலும் படிக்க ஆசை தான் ஆனால் இதுவரை நான் படிப்பதற்காக என் அப்பா அம்மா மிகவும் கஷ்டப்பட்டார்கள் மீண்டும் அவர்களை கஷ்டப்படுத்த விருப்பம் இல்லை அண்ணா என்று சொல்லி காவியா தன் பெற்றோர்களை கட்டிப்பிடித்து அழுத காட்சி இன்னும் எங்களை விட்டு நீங்கவில்லை கடைசியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக உங்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம் என்றும் மேற்கொண்டு நீ கண்டிப்பாக படிக்க வேண்டும் என்றும் காவியாவிடமும் அவர் பெற்றோர்களிடமும் கூறினோம்.
தயவுசெய்து இந்த ஏழை மாணவிக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- Meenakshi Sundaram
தொடர்புக்கு,
சேகர்( மாணவி அப்பா )- 9976915153
மீனாட்சி சுந்தரம் -9600104039
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பெரிய ஈச்சங்குழி கிளை.

0 comments:
கருத்துரையிடுக