வியாழன், 14 மே, 2015

பெரியார் மணியம்மை பல்கலை.யில் ஒருங்கிணைந்த பி.எஸ்ஸி., பி.எட். படிப்பு


தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டு கால ஒருங்கிணைந்த பி.எஸ்ஸி., பி.எட். பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நல். ராமச்சந்திரன் புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழகத்திலேயே முதல் முதலாக தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் வருகிற கல்வியாண்டில் (2015 - 16) நான்கு ஆண்டு கால ஒருங்கிணைந்த பி.எஸ்ஸி., பி.எட். என்ற புதிய பட்டப்படிப்பு தொடங்கப்படுகிறது. இது, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் (என்.சி.டி.இ.) அங்கீகாரம் பெற்றது.

இதில், இரு பாலரும் சேர்வதுக்கான கல்வித் தகுதியாக 12-ஆம் வகுப்பில் இதர பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களுடனும், பிற்படுத்தப்பட்டோர் 45 சதவீத மதிப்பெண்களுடனும், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் 40 சதவீத மதிப்பெண்களுடனும் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய முதன்மைப் பாட அமைப்புகளையும், கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் ஆகிய முதன்மைப் பாட அமைப்புகளையும் கொண்ட இரு பிரிவுகளில் நடத்தப்படுகிறது. இதேபோல, இந்தப் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டு கால பி.எட். பட்டப்படிப்புக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது என்றார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்