ஞாயிறு, 19 ஜூலை, 2015

மாணவர்கள் எண்ணிக்கை குறைவால் 1,200 அரசு பள்ளிகளை மூட முயற்சி நடப்பதாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றம்சாட்டியது.-தினத்தந்தி

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. இதில் மாநில செயலாளர் ஜீவானந்தம் மற்றும் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில தலைவர் மோசஸ், பொதுச்செயலாளர் பாலசந்தர் ஆகியோர் கூறியதாவது:-
தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆகஸ்டு 1-ந் தேதி நடைபெறும் தொடர் உண்ணாவிரதத்தில் நாங்களும் பங்கேற்போம்.
தமிழ்நாட்டில் மே மாதம் நடத்த வேண்டிய ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை தற்போது நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே பள்ளியில் பணியாற்றியவர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களுக்கு மனஉளைச்சலை கொடுத்துள்ளது. எனவே, பழைய முறைப்படி ஓராண்டு பணியாற்றியவர்களையும் கலந்தாய்வுக்கு அனுமதிக்க வேண்டும்.
1,200 பள்ளிகள்
தற்போது ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் 5 மெட்ரிக் பள்ளிகள் வரை உள்ளன. இதனால் அரசு பள்ளிகள் பாதிக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 10 மாணவர்களுக்கும் குறைவாக 1,200 பள்ளிகள் செயல்படுவதாக கல்வித்துறை கணக்கெடுத்துள்ளது. அந்த பள்ளிகளை மூடவும் முயற்சி நடப்பதாக தெரிகிறது.
அரசு பள்ளிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு விதிகளுக்கு மாறாக மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்