வியாழன், 9 ஜூலை, 2015

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வரும் 15ம் தேதி கிடைக்கும்

சென்னை: 'பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, வரும், 15ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்' என, அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த கல்வியாண்டில், பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதிய மாணவர்களுக்கு, மே, 14ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இது, ஆகஸ்ட் 6ம் தேதி வரை செல்லத்தக்கது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும், வரும், 15ம் தேதி, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம், காலை, 10:00 மணி முதல், இந்த சான்றிதழ் வழங்கப்படும். தனித்தேர்வர் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை, தேர்வு எழுதிய மையங்களில் பெறலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்