ஞாயிறு, 26 ஜூலை, 2015

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2 தேர்வு: 6 லட்சம் பேர் எழுதினர்

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2 தேர்வு: 6 லட்சம் பேர் எழுதினர்தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1241 இடங்களுக்கு போட்டி தேர்வு மூலம் பணியாளர்கள் நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. நடவடிக்கை மேற்கொண்டது.
இதற்கான முதல் நிலைத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் நடந்தது. 1511 மையங்களில் சுமார் 6 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு ஒரு மணி வரை நடந்தது.
சென்னையில் 60 ஆயிரம் பேர் இத்தேர்வை எழுதினர். எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சாந்தோம் செயிண்ட் பீட்ஸ் மேல் நிலைப்பள்ளி, உள்ளிட்ட 199 மையங்களில் குரூப்–2 தேர்வு நடந்தது. டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலகிருஷ்ணன் (பொறுப்பு) ரோசரி மேல் நிலைப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். தேர்வில் எவ்வித முறைகேடுக்கும் வழி வகுக்காமல் தகுந்த ஏற்பாடுகளை அவர் செய்திருந்தார்.
தேர்வு மையங்களில் எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன் போன்றவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேற்பார்வையாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர்கள், கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டு தேர்வு மையங்களை கண்காணித்தனர். திடீர் சோதனையிலும் ஈடுபட்டனர்.
முதல் கட்ட இந்த எழுத்து தேர்வு முடிந்தவுடன் இதிலிருந்து ஒரு காலியிடத்துக்கு 10 பேர் விகிதம் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். முதலில் மெயின் தேர்வு மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண் ஆகியவற்றை சேர்த்து இட ஒதுக்கீடு அடிப்படையில் தர வரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படும்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்