செய்யப்பட்டவர்கள் – பணி நியமனம் பெற்று முதுகலை ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்களாகபணிபுரிபவர்கள் – முறையான நியமனமாக
முறைப்படுத்தி ஆணை வழங்குதல் | அரசாணை(நிலை) எண்.135, பள்ளிக்கல்வித் (வ.செ.2) துறை, நாள். 03.06.2010-ன்படி நேரடி நியமனம் செய்ய 2010-11ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலையாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு இவ்வலுவலக செயல்முறைகள் மூலம் வழங்கப்பட்ட நேரடி பணி நியமனங்கள் அனைத்தும் அவ்வாசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ள மேற்படி ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதோடு, இவ்வாணை வழக்கு நீதிப்பேராணை மனு எண்.13884/2008-ல் வழங்கப்படும் இறுதித் தீர்ப்பாணைக்குட்பட்டதாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இச்செயல்முறைகளின் நகல்களை தொடர்புடையப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் சார்ந்த ஆசிரியர்களுக்கு அனுப்பி வைப்பதோடு, அவர்களது பணிப்பதிவேடுகளில் பதிவுகளை செய்ய உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்பட வேண்டும்
0 comments:
கருத்துரையிடுக