முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்குகளை ஒட்டி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் உள்பட வியாழக்கிழமை (ஜூலை 30) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி.,
புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவை ஒட்டி, வியாழக்கிழமை பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, வியாழக்கிழமை நடைபெறவிருந்த குரூப் 2 நேர்முகத் தேர்வு வெள்ளிக்கிழமை (ஜூலை 31) நடைபெறும். இதுகுறித்து விண்ணப்பதாரர்களுக்கு, செல்லிடப்பேசி குறுஞ்செய்தி, மின்னஞ்சல் ஆகியவை வழியாகத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை (ஜூலை 31) நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் அன்றைய தினமே நேர்முகத் தேர்வு நடைபெறும்.
குரூப் 4 தேர்வு: குரூப் 4 பிரிவில் அடங்கிய சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பும் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) நடைபெறும். இதுதொடர்பான தகவலும் தேர்வர்களுக்கு செல்லிடப்பேசி குறுஞ்செய்தி, மின்னஞ்சல் ஆகியன மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
எழுதுபொருள்-அச்சுத் துறை: எழுதுபொருள்-அச்சுத் துறை இயக்ககத்தில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த அலுவலக உதவியாளர்-இளநிலை அனுப்புகை பணியாளர் (ஙங்ள்ள்ங்ய்ஞ்ங்ழ்) பதவிக்கான நேர்காணல் ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் நலத் துறை: ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்-தமிழாசிரியர்-இடைநிலை ஆசிரியர், உடல்கல்வி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கு வியாழக்கிழமை நடைபெறவிருந்த பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை (ஜூலை 31) காலை 10 மணியளவில் இணையவழி மூலம் மாறுதல் கோரி பதிவு செய்யப்பட்ட பதவிகளுக்கு மட்டும் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சட்டப் படிப்பு கலந்தாய்வு ஒத்திவைப்பு: தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதை ஒட்டி, வியாழக்கிழமை (ஜூலை 30) நடைபெற இருந்த ஐந்தாண்டு சட்டப் படிப்பு கலந்தாய்வு, ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இளநிலை சட்டப் படிப்புகள் சேர்க்கைக்கான கலந்தாய்வை சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இணைப்பு கல்லூரிகளில் வழங்கப்படும் 1,052 இடங்களைக் கொண்ட ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.
இதில், எஞ்சிய இடங்களுக்கு ஜூலை 30-இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குடியரசு முன்னாள் தலைவர் கலாமின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளதால் வியாழக்கிழமை (ஜூலை 30) நடைபெற இருந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பி.இ., எம்.சி.ஏ. கலந்தாய்வுகள் ஒத்திவைப்பு: இதேபோல, தொழில் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு, எம்.சி.ஏ. கலந்தாய்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான பி.இ. கலந்தாய்வு ஜூன் 28-ஆம் தேதியும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஜூன் 29- ஆம் தேதியும் நடத்தப்பட்டன. ஜூன் 1 முதல் 28-ஆம் தேதி வரை பொதுப் பிரிவு கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டு நாள்கள் நடத்தப்பட இருந்த பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு புதன்கிழமை (ஜூலை 29) தொடங்கியது.
இந்த நிலையில், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட இருந்த கலந்தாய்வு அடுத்தடுத்த நாள்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி:
கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளதையடுத்து, 30-7-2015 அன்று நடைபெற இருந்த பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு, 31-7-2015-க்கு ஒத்திவைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.சி.ஏ. கலந்தாய்வு: இதுபோல, கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வியாழக்கிழமை (ஜூலை 30) நடைபெற இருந்த எம்.சி.ஏ. சேர்க்கைக்கான கலந்தாய்வு 31-7-2015 அன்றைக்கும், 31-7-2015 அன்று நடைபெற இருந்த கலந்தாய்வு 1-8-2015-க்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

0 comments:
கருத்துரையிடுக