குரூப் - 2 தேர்வுக்கான நேர்காணல் தேதி விவரங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:குரூப் - 2 நேர்முகத் தேர்வு பதவிகளுக்கு, முதன்மை எழுத்துத் தேர்வு, கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல், ஜூலை, 15ம் தேதி முதல் ஆகஸ்ட், 8ம் தேதி வரை நடக்கும்.
நேர்காணலுக்கு தேர்வானோர் பட்டியல், ஜூலை, 2ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.நேர்காணல் அழைப்புக் கடிதமும், தேதி, நேரம் போன்ற விவரங்களுடன், www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு அஞ்சல் வழியாகவும் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக