புதன், 29 ஜூலை, 2015

மேற்படிப்பு உதவித்தொகை: லாரி ஓட்டுநர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்

அசோக் லைலேண்ட் மூலம் வழங்கப்படும் மேற்படிப்பு உதவித்தொகை பெற, அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற கனரக வாகன ஓட்டுநர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநிலத் தலைவர் கே.நல்லதம்பி வெளியிட்ட அறிக்கை: 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 100 மாணவர்களுக்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 50 மாணவர்களுக்கும் மேற்படிப்புக்கான உதவித்தொகையை அசோக் லைலேண்ட் நிறுவனம் வழங்குகிறது.
தகுதியான கனரக வாகன ஓட்டுநர்களின் வாரிசுதாரர்கள், நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். அல்லது இணையதள முகவரியில் இருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை, அசோக் லைலேண்ட் மற்றும் டிவிஎஸ் உதவித்தொகை திட்டம், அசோக் லைலேண்ட் லிமிடெட், தென் மண்டல அலுவலகம், 3-ஆவது தளம் கிழக்குப் பகுதி, எண் 1 சர்தார் பட்டேல் சாலை, கிண்டி, சென்னை 600032 என்ற முகவரிக்கு, வரும் ஆகஸ்ட
10-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்