புதன், 29 ஜூலை, 2015

என்ன ஒரு முட்டாள்தனம்.

நமது குடியரசுத் தலைவர் டாக்டர். கலாம் அவர்கள் மறைவு.
அதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை. தமிழக அரசு அறிவிப்பு என்ற செய்தி.
ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட இன்று விடுமுறை வேண்டும் என எவரும் கேட்கவில்லை.
பள்ளிகள் விடுமுறை என்று நேற்று இரவுமுழுவதும் தொலைக்காட்சிகளில் செய்திகள் (ஜெயா தொலைக்காட்சி யைத்தவிர) வருகின்றன.
எங்கயோ ஒரு குக்கிராமத்தில் நடக்கும் பள்ளிகள் தொடர்பான செய்திகள் சென்னையை சென்றடையும் போது
இந்த செய்தி ஏன் செல்லவில்லை.?
32 CEOக்கள் 32 DEEOக்கள் 800க்கு மேற்பட்ட AEEO க்கள் உட்பட
ஓரு அலுவலரும் தொலைக்காட்சியை இரவு பார்க்கவில்லையா ?.
அரசு வெளியிடதா ஒரு செய்தி நேற்று இரவிலிருந்து இன்று
காலை 7.45 மணி வரை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்படுகிறது என்றால்
உளவுத்துறை என்ன செய்துகொண்டிருந்தது?
காலை 7.45 மணிக்கு மேல் பள்ளி இருக்கும் என்ற தகவல் வரும் போது தொலைவிலிருந்து வரும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளாகி இருப்பார்கள் என்பது அரசுக்கு தெரியுமா?
அரசு வெளியிடதா ஒரு செய்தியை திட்டமிட்டு பரப்பிய ஊடகங்கள் மீதும்
அதனை தடுக்க முற்படாமல் இருந்த கல்வித்துறை அலுவலர்கள் மீதும் தமிழகஅரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மெத்த பணிவோடு கேட்டுக்
கொள்கின்றோம்.
இவன்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
பவானிசாகர் வட்டாரக்கிளை.
ஈரோடு மாவட்டம்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்