எஸ்கலேட்டர் திடீரென உடைந்து விழுந்த விபத்தில் மகனை காப்பாற்றிய தாய், எஸ்கலேட்டர் மெஷினுக்குள் சிக்கி உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
சீனாவில் உள்ள சிங்ஷூ சசி அனிலியாங் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில், மேல் மாடிக்கு செல்லும் எஸ்கலேட்டர் எனப்படும் நகரும் படிக்கட்டில். கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பெண் தனது சிறு வயது மகனுடன் எஸ்கலேட்டரில் ஏறி வந்து கொண்டு இருந்தார்.
கடைசி படிகட்டு வந்ததும் திடீரென எஸ்கலேட்டர் உடைந்து விழுந்தது. இதில், எஸ்கலேட்டர் மெஷினுக்குள் தாயார் சிக்கி கொண்டார். உடனடியாக மகனை தூக்கி வீசிய தாய், எஸ்கலேட்டர் மிஷனில் சிக்கி உயிரிழந்தார். அந்த பெண்ணை காப்பாற்ற நிறுவன ஊழியர்கள் எவ்வளவோ முயன்றும் காப்பாற்ற முடியவில்லை. அவரது உடல் 3 மணி நேரம் கழித்து மீட்கப்பட்டது.

இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சி டிபார்ட்மெண்ட் ஸ்டோரின் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. 15 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோ, யுடியூபில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக