முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.அப்துல் கலாம் அவர்களின் மறைவை முன்னிட்டு 30.07.2015 அன்று பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
எனவே, 30.07.2015 அன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு மற்றும் கவுன்சிலிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு
எனவே, 30.07.2015 அன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு மற்றும் கவுன்சிலிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு
ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வு- II, 2013-2014ல் அடங்கிய பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு மற்றும் தொகுதி-IVல் 2013-2014 மற்றும், 2014-2015ல் அடங்கிய சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, 31.07.2015 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 31.07.2015 அன்று நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்பிக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், அன்றே நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் வழியாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
கவுன்சிலிங்
சென்னை அண்ணா பல்கலையில் நாளை நடைபெற இருந்த தொழிற்கல்வி படிப்புக்கான கவுன்சிலிங் ஜூலை 31ம் தேதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவையில் நடைபெற இருந்த எம்.சி.ஏ. கவுன்சிலிங்கும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

0 comments:
கருத்துரையிடுக