ஊதிய முரண்பாட்டுகளாலும்,தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தினாலும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களுக்காக போராட வலுவான அமைப்பை எதிர்நோக்கி இருந்த நேரத்தில் அங்கீகரீக்கப்பட்ட சங்கங்களை உள்ளடக்கி ஜாக்டோ என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.இந்த அமைப்பை ஒட்டு மொத்த ஆசிரியர்களும் நம்பிக்கையுடன் எதிர்நோக்கினர்.ஆனால் இந்த அமைப்பின் செயல்பாடுகள்,போராட்ட அறிவிப்புகள்,கேலிக்கூத்தாக உள்ளது.பிரதான சங்கங்களை உள்ளடக்கிய அமைப்பு தைரியமான,சவால் விடும் போராட்டங்களை அறிவிக்காமல்,நடத்தாமல் ஏதோ பேர்அளவில் போராட்டங்களை நடத்துகின்றது.போராட்டம் என்ற பெயரில் காலம் கடத்தும் நடவடிக்கையை கட்சிதமாக செய்கின்றனர்.ஆசிரியர்களை நம்பால் அரசியல்வாதிகளை தேடிச்சென்று போராட்ட வியூகம் அமைக்கின்றனர்.அரசு ஊழியர்,ஆசிரியர்களை இரண்டாம்தர குடிமக்களை போல் நடத்தும் நடத்தும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு ஜாக்டோவின் இந்த செயல் ஆசிரியர்கள் மேல் அரசுக்கு தீராத பகையை ஏற்படுத்திவிடும் என்பது தெரியாதா?.ஆகஸ்ட் 1 அன்று நடைபெறும் தொடர்முழக்க உண்ணாவிரத போராட்டத்தில் ஆசிரியர்களின் நேரடிப்பங்கேற்பு இல்லை ஏன்?.போராட்ட உணர்வு ஆசிரியர்களிடையே குறைந்துகொண்டே வரும் சூழ்நிலையில் இந்த போராட்டம் ஆசிரியர்களிடையே எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்திவிடாது.அன்று அசைவ உணவை சுவைத்துக்கொண்டு காலாட்டிக்கொண்டு ஊடகங்களில் போராட்ட நிகழ்வுகளை பார்க்கும் ஒரு செய்திபோல்தான் ஆசிரியர்களிடையே ஆகஸ்ட் 1 போராட்டத்தின் தாக்கம் இருக்கும்.ஜாக்டோவிற்கு இடைநிலை ஆசிரியர்களின் இறுதி கோரிக்கை இதுதான்-உணர்வுப்பூர்வமான வலுவான,உடனடித்தாக்கத்தை ஏற்படுத்தும் உருப்படியான போராட்டத்தை அறிவியுங்கள்.அது பள்ளிகளை மூடும் போராட்டம் என்பதைச் சொல்லத்தான் வேண்டுமா?
செவ்வாய், 21 ஜூலை, 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக