வியாழன், 9 ஜூலை, 2015

அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்விக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இதில், இளங்கலை பி.காம்., பி.காம் நேரடி 2 ஆம் ஆண்டு, பி.காம் சி.ஏ., பி.காம் சி.ஏ. நேரடி 2 ஆம் ஆண்டு, பி.பி.ஏ., பி.பி.ஏ. நேரடி 2 ஆம் ஆண்டு, பி.பி.ஏ. வங்கியியல், சி.எஸ்., பி.ஏ. வரலாறு, பி.எல்.ஐ.எஸ்., பி.சி.ஏ., பி.சி.ஏ. நேரடி 2 ஆம் ஆண்டு, பி.எஸ்சி. தகவல் தொழில்நுட்பம், பி.எஸ்சி. தகவல் தொழில்நுட்பம் நேரடி 2 ஆம் ஆண்டு, பி.எஸ்சி. கணினி அறிவியல், இதில் நேரடி 2 ஆம் ஆண்டு, பி.எஸ்சி. சைகாலஜி.
முதுகலையில், எம்.பி.ஏ. பொது செமஸ்டர், நான் செமஸ்டர், எம்.பி.ஏ. ஹியூமன் ரிசோர்ஸ், ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட், புராஜெக்ட் மேனேஜ்மென்ட், ரீடெய்ல் மேனேஜ்மென்ட், டூரிசம், லாஜிஸ்டிக் மேனேஜ்மென்ட், எம்.பி.ஏ. 5 ஆண்டுகள், எம்.பி.ஏ. எஜூகேஷன் மேனேஜ்மென்ட், எம்.ஏ. கல்வியியல், குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வியியல், மனிதவள மேலாண்மை மற்றும் தொழில் உறவியல் நேரடி 2 ஆம் ஆண்டு, இதழியல் மற்றும் மக்கள் தொடர்பு, எம்.காம். பைனான்ஸ் கன்ட்ரோல், எம்.எஸ்சி. வேதியியல், விலங்கியல், தாவரவியல், முதுகலை அறிவியல் தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் பொறியியல், முதுகலை சமூகப்பணி, எம்.எல்.ஐ.எஸ்.
பி.ஜி. டிப்ளமோ பிரிவில் பிம் அண்ட் ஐஆர், ஹெச்.ஆர்.எம்., பிஸினஸ் மேனேஜ் மென்ட், பி.ஜி.டி.சி.ஏ., பி.ஜி.டி.லேன் ஆகியவற்றுக்கும், சி.எல்.ஐ.எஸ். ஆகிய சான்றி தழ் படிப்புக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இம்முடிவுகள் வெளியான 10 தினங்களுக்குள் (18.7.15-க்குள்) மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
மறுமதிப்பீட்டுக்கான விண்ணப்பம் பல்கலைக்கழக இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பாடம் ஒன்றுக்கு ரூ. 500 மறுமதிப்பீட்டுக் கட்டணமாக, பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி என்ற பெயரில் வரைவோலை செலுத்தி, தேர்வுப் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று, தேர்வாணையர் கா. உதயசூரியன் தெரிவித்துள்ளார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்